Tuesday, August 30, 2016

ஆத்மாநாம் கவிதை சர்ச்சை - வார்த்தைகள்

ஆத்மநாம் கவிதைகள் இதழில் வெளியான போது இருந்த வரிகள், காலச்சுவடு பதிப்பில் வேறுபட்டுள்ளதைப் பேராசிரியர் கல்யாணராமன் கட்டுரையில் கோடி காட்டியிருக்கிறார்.

கட்டுரையின் பல சாராம்சங்களை விட்டுவிட்டு முக்கியமான விஷயங்களை மட்டும் இங்கு வரிசைப் படுத்தியிருக்கிறேன்.
நம் சூழலில் எல்லாமே - "சூனியத்தில் ..... முற்றுப்புள்ளி..."

வ.எண்
கவிதை
முதலில் வெளிவந்த
இதழ் / தொகுப்பு
முதலில் பிரசுரமான வரி
மாற்றத்துடன் வந்த தொகுப்பு
மாற்றப்பட்ட வரி
           1. 
பழக்கம்
கவனம், மார்ச் 81
நடப்பதில் மகிழ்ச்சி உண்டாயிற்று
காகிதத்தில் ஒரு கோடு (மே 81 )
நடப்பதில் ஒரு மகிழ்ச்சி உண்டாயிற்று


          2. 
பழக்கம்
கவனம் மார்ச் 81
ஒரு சதுரத்தில் நடக்கின்றோம்
காகிதத்தில் ஒரு கோடு (மே 81 )
ஒரு சதுரத்திற்குள் நடக்கிறானாம்
          3. 
பழக்கம்
கவனம் மார்ச் 81
நான் என்ன சொல்ல இருக்கிறது, இது என்ன என
காகிதத்தில் ஒரு கோடு (மே 81 )
நான் எண்ண
         4.  
பழக்கம்
கவனம் மார்ச் 81
சாலையிலேயே  நடக்க முடியவில்லை
காகிதத்தில் ஒரு கோடு (மே 81 )
ரோட்டிலேயே நடக்க முடியவில்லை
        5.
இன்னும்
நாற்றாங்கால் மே 74
பாசிக்கரை படர்ந்த
ஆத்மாநாம் படைப்புகள் (காலச்சுவடு 2002)
பாசிக்கறை படர்ந்த
         6.
இயக்க விதி
(நவம்’80)
என் மனம் ஒரு கண்ணாடி
  ஆத்மாநாம் படைப்புகள் (காலச்சுவடு 2002)  
        
என் மனம் ஓர் கண்ணாடி
         7.
தோற்றம்
(மார்ச்’ 81)
தோற்றம் சாதாரண விஷயமல்ல
காகிதத்தில் ஒரு கோடு
தோற்றம் சாதாரண விஷயமில்லை
         8. 
இழுப்பறைகள் கொண்ட மேஜை
(பிப்’ 82)
அடுத்து நான் விழவேண்டும்
ஆத்மாநாம் கவிதைகள் (தன்யா &பிரம்மா)89
அடுத்துதான் விழவேண்டும்
         9.
இழுப்பறைகள் கொண்ட மேஜை
”   “   “
அவசரமாய் மேஜை அறையுள் ஒரு சிறு துணி கிடைக்கிறது
ஆத்மாநாம் கவிதைகள் (தன்யா &பிரம்மா)89
------ (முற்றிலும் விடுபட்டுள்ளது)
        10.
சென்றுன் எதிரியைத் தேடு
கணையாழி
ஜூன் 73
தொப்பையிலும் புல் தெரிய
ஆத்மாநாம் கவிதைகள் (தன்யா &பிரம்மா)89
தொப்பையில் புல் தெரிய
        11.
சென்றுன் எதிரியைத் தேடு
கணையாழி
ஜூன் 73
உன் காற்சட்டை மட்டும் கொடு
ஆத்மாநாம் கவிதைகள் (தன்யா &பிரம்மா)89
உன் காற்சட்டை தருவேன்
        12.
சென்றுன் எதிரியைத் தேடு
கணையாழி
ஜூன் 73
என் உயிரும் தருவேன்
ஆத்மாநாம் கவிதைகள் (தன்யா &பிரம்மா)89
 --- (முற்றிலும் விடுபட்டுள்ளது)
        13.
சுதந்திரம்
ஸ்வரம்
(ஜன 83)
பறிக்கப்படுமெனின்
ஆத்மாநாம் கவிதைகள் (தன்யா &பிரம்மா)89
பறிக்கப்படுமெனில்
        14.
சுதந்திரம்
ஸ்வரம்
(ஜன 83)
மற்றவரை
 ஆத்மாநாம் கவிதைகள் (தன்யா &பிரம்மா)89
மாற்றானை
        15.
சுதந்திரம்
ஸ்வரம்
(ஜன 83)
உனதுயிர் மீது ஆசை இருந்தால்
ஆத்மாநாம் கவிதைகள் (தன்யா &பிரம்மா)89
உன் மீது ஆசை இருந்தால்
        16.
கேள்வி
கசடதபற
செப் 72
(கவிதையின் தலைப்பு): கேள்வி
 ஆத்மாநாம் கவிதைகள்
(காலச்சுவடு) 2002
(கவிதையின் தலைப்பு) 
கட்டை
        17.
கேள்வி
கணையாழி
ஆகஸ்ட் 81
(கவிதையின் தலைப்பு): கேள்வி
ஆத்மாநாம் கவிதைகள்
(காலச்சுவடு) 2002
(கவிதையின் தலைப்பு)
’முடிவில்’
        18.
நகர்ப்புறம்
¼ (கால்)
ஏப்-ஜூன் 82
(கவிதையின் தலைப்பு)
நகர்ப்புறம்
      ஆத்மாநாம் கவிதைகள்
(காலச்சுவடு) 2002                                                    
(கவிதையின் தலைப்பு 0
புறநகர்
        19.
எனினும் என்ற பிரச்னை
மீட்சி
ஜன – மார்ச் 88
(கவிதையின் தலைப்பு )
எனினும் என்ற பிரச்னை
  ஆத்மாநாம் கவிதைகள்
(காலச்சுவடு) 2002
(கவிதையின் தலைப்பு)
என்ற கேள்வி
        20.
காலம் கடந்த
மீட்சி
ஜூலை 84
இது ஏசுவோ புத்தரோ / ஆதி சங்கரோ / ‘மகாத்மா’ காந்தியோ /பிரச்சாரம் செய்த / அன்பு அல்ல/ நானே /ஆகிய / அன்பு
ஆத்மாநாம் கவிதைகள்
(காலச்சுவடு) 2002
  -----------------
(முற்றிலுமாக விடுபட்டுள்ளது)

        21.
அன்பு
படிகள்
(இதழ் 20: 1984)
மனிதன் வெற்றுடம்புடன் திரிகிறான், நகரமெங்கும், அன்பைத்தேடி, அச்சத்துடன்
 ஆத்மாநாம் கவிதைகள்
(காலச்சுவடு) 2002
மனிதன் நிர்வாணமாய்த் திரிகிறான், நகரமெங்கும், அன்பைத்தேடி, பயத்துடன்
        22.
ஸ்நேகம்
படிகள்
(இதழ் 20: 1984)
எந்தக் குறிப்பிட்ட திசையையும் பின்பற்றாது வண்ணாத்திப்பூச்சிகள் வாழ்க்கையை நடத்துகொன்றன
  ஆத்மாநாம் கவிதைகள்
(காலச்சுவடு) 2002
எனினும் எந்தத் தரையோடு பறக்கும் வண்ணாத்திப் பூச்சியின் திசையும் பின்பற்றாது வண்ணாத்திப் பூச்சிகள் வாழ்க்கையை நடத்துகின்றன
        23.
ஒரு கவிதை எனும் ஒரு கவிதை
அக்டோபர் 81
ஒருவரும் அனுதாபத்துடன் நுணுகவில்லை

ஆத்மாநாம் கவிதைகள்
(காலச்சுவடு) 2002
ஒருவரும் அனுதாபத்துடன் அணுகவில்லை
        24.
மூன்று கவிதைகள்
ஆத்மாநாம் கவிதைகள் (தன்யா &பிரம்மா)89
இப்பரந்த உலகின் தூசி முனையில்

ஆத்மாநாம் கவிதைகள்
(காலச்சுவடு) 2002
இப்பரந்த உலகின் ஊசி முனையில்