Thursday, November 12, 2015

விருதுகள் – பெறுதலும் பொருமலும்

கொங்கு தேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ;
பயிலியது கெழிஇய நட்பின், மயில்இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?

இறையனார் இயற்றிய இந்தக் குறுந்தொகைப் பாடல்தான் புலவர்களின் சண்டை ஆதிகாலத்திலிருந்தே தொன்றுதொட்டு வருகிறது என்பதை நமக்கு உணர்த்தும் பாடல்.

சிவாஜியின் கிளர்சியான நடிப்பில், திருவிளையாடல் படத்தில் வரும் காட்சிகள் ஞாபகம் வருகிறதுதானே!? தருமியாக நடித்த நாகேஷின் நடிப்பை மறக்க முடியுமா என்ன?

“இயற்கையில் பெண்களின் கூந்தலுக்கு மணம் உள்ளதா?” என்பதுதான் அரசனின் ஐயம். கூந்தலுக்கு ‘ஈ’ நாத்தம் ‘பீ’ நாத்தம் இல்லை என்பதைக் காலம் கடத்தாமல் நேரடியாகவே அரசனிடம் நக்கீரர் சொல்லி இருக்கலாம். தருமி வந்து இறையனாரின் பாடலைப் பாடி, பொற்கிழி தருமியின் கைகளுக்குச் செல்லும் தருணத்தில் “பாடலில் குற்றம் உள்ளது...!” என்று நக்கீரர் கண்களைத் திறக்கிறார்.

இதன் தொடர்ச்சியாகத் தமிழர்கள் விருதுச் சண்டைகளைப் பாரம்பரியச் சண்டைகளாகவே பாவித்து வருகின்றனர். தகுதியில்லாதவர்களுக்கு விருது கொடுக்கப்படுகிறது என்று எந்த விருதினை அறிவித்தாலும் சலசலப்பு எழுகிறது.

(இந்தப் பதிவில் எழுதிய கருத்துக்கள் சார்ந்து ஒரு சிற்றிதழில் கட்டுரை கேட்டிருந்ததால் - பதிவிட்டிருந்தவை நீக்கப்பட்டுகிறது. வேறொரு தருணத்தில் அவை மீண்டும் பதியப்படும்.

நன்றி...)