Friday, November 13, 2009

சேரலின் அழைப்பு: தொடர் பதிவு

பிடித்த, பிடிக்காத விஷயங்களாக தமிழகத்தைத் தொடர்புபடுத்தி, தமிழக பிரபலங்களைத் தொடர்புபடுத்தி பதில்கள் தருமாறு சேரல் சொல்லி இருந்தான். ஆனால் எண்ணங்கள் அந்த நிபந்தனையை மீறிச் செல்கிறது.. அதை அப்படியே இங்கு பதிகிறேன். அழைப்பிற்கு நன்றி சேரல்.

இந்தத் தொடர் பதிவுக்கான விதிகளாகக் கொடுக்கப்பட்டிருப்பவை

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)

I always break the rules. ha ha ha ha ha... But i hope others will follow...

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்.

நான் யாரன்னு கண்டு பிடிப்பேன் சேரல்...! முயற்சி செய்கிறேன்.

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

இனி பட்டியல்....

01.
பிடித்த நிர்வாகி : ஸ்ரீதர் வேம்பு (zoho corporation - http://www.zohocorp.com/) சப்தமே இல்லாமல் சாதனை செய்துகொண்டிருக்கும் தமிழர்.
பிடிக்காத நிர்வாகி : ராமலிங்க ராஜு (காரணம் உங்களுக்கே தெரியும்.)

02.
பிடித்த தலைவர் : நர்மதா அணையின் அருகிலுள்ளவர்களுக்காகப் போராடும் 'மேதா பட்கர்'. நோபல் பரிசு வாங்கிய பர்மாவின் இரும்புப் பெண்மணி ஆங் சான் சூ கி மற்றும் செடி,கொடிகளுக்காகக்கூட குரல் கொடுத்த கென்யாவின் வங்காரி மாதாய். இவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் அவர்களைப் பற்றி நாளேடுகளில் படித்தேன் என்பது நிறைவான விஷயம். இவர்களுடைய எளிமையான வாழ்வு என்னைக் கவருகிறது. அவர்கள் நினைத்திருந்தால் எப்படி வேண்டுமானாலும் சுகமாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் ஒரு தலைமுறைக்காகவே போராடுகிறார்கள்.
பிடிக்காத தலைவர்: 'மனிதன் ஒரு அரசியல் விலங்கு' என்று யாரோ ஒரு தத்துவமேதை கூறியது ஞாபகம் வருகிறது. அதற்கும் ஒரு படி மேலே சென்று மத அரசியல், ஜாதி அரசியல், கட்சி அரசியல், ஆன்மீக அரசியல், ஊடக அரசியல் என்று மிருகங்களாகக் காட்சியளிக்கும் தொண்டன் முதல் தலைவன் வரை அனைவரும். "அட, அப்போ தற்போதுள்ள எல்லா அரசியல் வாதிகளும் என்று சொல்கிறீர்களா?" நிச்சயமாக... அப்போ கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ், வை கோ, எல்லாரையும் சேர்த்துக்கோங்க.

03.
பிடித்த எழுத்தாளர்கள்: கி ரா, அ முத்துலிங்கம், அசோகமித்திரன், மாலன், குரு மூர்த்தி(www.gurumurthy.net), பாரதி, மதன், சுஜாதா, ஜெ. மோ, எஸ். ரா, கல்கி, ராஜ் கௌதமன், ஆதவன், பாவண்ணன்... இன்னும் இன்னும்...
பிடிக்காத எழுத்தாளர்கள் : சொந்த ஆதாயத்திற்காக தகவல் பிழையுடன் எழுதும் அனைவரும். குறிப்பாக அரசியல் எழுத்தாளர்கள். சில நேரங்களில் BJP மற்றும் RSS இயக்கத்தை உயர்த்திப் பிடிக்கிறாரோ என்று குரு மூர்த்தியையும் நெருடலுடன் வாசித்ததுண்டு.

04.
பிடித்த இயக்குனர்கள்: 1.கருப்பு வெள்ளை படம் 'சபாபதி' பட இயக்குக்னர் (பெயர் தெரியவில்லை), 2.காதலிக்க நேரமில்லை 'ஸ்ரீதர்', 3. சில்ரேன்ஸ் ஆப் ஹெவன் 'மஜித் மஜிடி' 3. இயக்குனர் பாக்கியராஜ் ('தூறல் நின்னு போச்சு'-எவ்வளோ அழகான திரைப்படம்!)... (யாரு கண்டா என்னோட மருமகன்கள் முத்துவும், வினோத்தும் கூட இந்த வரிசையில பின்னாளில் வரலாம். பிரபலங்கள் ஆகலாம்.)
பிடிக்காத இயக்குனர்கள்: உதவி இயக்குனர்களிடம் வேலை வாங்கிவிட்டு டைட்டிலில் தன்னுடைய பெயரைப் போட்டுக்கொள்ளும் அனைத்து இயக்குனர்களும். (அப்போ எல்லா இயக்குனரும் என்று சொல்கிறீர்களா? அப்படியும் எடுத்துக் கொள்ளலாம்.)

05.
பிடித்த இசைக்கலைஞர்: இசைஞானி இளையராஜா... (அவருடைய படைப்பில் பங்கு செலுத்திய நிறைய பேர்...). ஒரே வருடத்தில் 20 முதல் 30 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்று தெரிய வரும் பொழுது பிரம்மிப்பாக இருக்கிறது. அவருக்கு உதவியாளர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிக்காத இசைக்கலைஞர்: 1. இளையராஜா இசையமைத்த அனைத்துப் பாடல்களுமே பிரசித்தி பெற்றது என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் குறுகிய நாட்களில் படத்திற்கு இசையமைக்கும் அளவிற்கு பரபரப்பாக இருந்திருக்கிறார். அந்த மாதிரியான நேரங்களில் சில சோர்வான படைப்புகள் வருவது இயல்புதானே. அதுபோன்ற அவசர நிலை படைப்புகளைக் கொடுத்த அவருடைய இசை எனக்குப் பிடிக்காது. அந்த நேரங்களில் "நீயா இதை செய்தது?" என்று கோபம் வரும். அடுத்த நிமிடமே அவருடைய சிறந்த படைப்பைக் கேட்டு என்னை சரி செய்துகொள்வேன்.
2. பழையப் பாடல்களை ரீ-மிக்ஸ் செய்பவர்கள் அனைவரும்.

06.
பிடித்த பாடகர்: ஜேசுதாஸ் மற்றும் எஸ்.பி.பி
பிடித்த பாடகி: ஜானகி அம்மா
பிடிக்காத பாடகர்கள்: பிடிக்காதவர்கள் என்று யாரும் ஞாபகம் வரவில்லை. பிடிக்காத பாடல்களை உடனே மாற்றிவிடுவேன். சில நேரங்களில் பிடித்த பாடல்களிலேயே சில கோளாறு இருக்கும். அதாவது பாடும்போது இடையிடையே மூச்சு விடுவதும், எடுப்பதும் கேட்கக் கூடாது. அப்படியில்லாமல் சில பாடல்களைக் கேட்கும் போது பாடியவர்களின் மீது எரிச்சலாக இருக்கும். உதாரணமாக 'முன்பே வா என் அன்பே வா- பாடலில் ஸ்ரேயா கோஷல்' மற்றும் 'எனதுயிரே எனதுயிரே' - பாடலில் நிகில் மாத்யூ.

07.
பிடித்த அரசு அதிகாரி: T.N.சேஷன் (தேர்தல் அதிகாரி), இறையன்பு I.A.S மற்றும் கிரண் பேடி I.P.S (அரசு நிர்வாகத்திலுள்ள அரசியல் காரணமாக வேலையை ராஜினாமா செய்துவிட்டார் என்று நினைக்கிறேன்.) உங்களுக்குத் தெரிந்து நேர்மையானவர்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள். பகிர்ந்துகொள்ளலாம்.
பிடிக்காத அரசு அதிகாரி: நிறைய பேர் இருக்கிறார்கள். நாங்கள் தான் ஏணிகள் என்று சொல்லிக் கொள்ளும் ஆசிரியர்கள். பரீட்சை முடிவுக்காக குழந்தைகள் காத்திருக்கும் போது விடைத்தாள்களைத் திருத்தமாட்டோம் ஊதிய உயர்வு வேண்டும் என்று அடம் பிடிக்கும் சங்கங்கள் முழுவதும். (எனக்குப் பிடித்த நிறைய பேர் இதில் அடங்குவார்கள். அதை அவர்களிடமே சொல்லி இருக்கிறேன்.)

08.
பிடித்த பத்திரிகையாளர்: மாலன்
பிடிக்காத பத்திரிகையாளர்: நக்கீரன் கோபால்

அழைக்கும் பதிவர்கள் :

வேல் கண்ணன்
ரகுநாதன்
சுள்ளிக்காடன் ஹிஜு
நிர்வாணம் ஞானசேகர்
அடலேறு

5 comments:

  1. //அவர்கள் நினைத்திருந்தால் எப்படி வேண்டுமானாலும் சுகமாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் ஒரு தலைமுறைக்காகவே போராடுகிறார்கள்.//
    உண்மைதான் கிருஷ்ணா, அதுவும் நாம் வாழ்ந்த காலத்தில் எனும் போது நெஞ்சமும் கண்களும் நிறைகிறது. உங்களின் பிடித்தது., பிடிக்காதது இவற்றில் எனக்கு மிகவும் பிடித்துபோனிர்கள் கிருஷ்ணபிரபு.உங்களின் தொடர் அழைப்புக்கு நன்றி. முயற்சி செய்கிறேன்..

    ReplyDelete
  2. அருமையான பதில்கள். ரொம்ப பிடிச்சிருந்தது. :)

    //நர்மதா அணையின் அருகிலுள்ளவர்களுக்காகப் போராடும் 'மேதா பட்கர்'.

    அருந்ததிராய் இவங்க போராட்டம் பற்றி எழுதியிருப்பதை படிச்சிருக்கேன். ரொம்பவும் பாராட்டப்பட வேண்டியவர்.

    ReplyDelete
  3. பிடிக்காத பாடகி: ஜானகி அம்மா..ஒருவேளை நமக்கு பிடிக்காதவரின் வீடு எப்படி இருக்கிறதென பார்த்துவரப் போனீர்களோ இவுங்க வீட்டுக்கு?

    அடுத்ததா..கவிதைக்கு பொய் அழகு..அது யாரையும் காயப் படுத்தாமல் இருக்கும் வரை.

    நன்றி

    ReplyDelete
  4. வேல் கண்ணன், கார்த்தி இவருடைய கருத்திற்கும் நன்றி...

    @ முத்து

    கவனக் குறைவினால் அப்படி தவறுதலாக குறிப்பிட்டுவிட்டேன் முத்து, எனக்கு பிடித்த ஆஸ்தான பாடகி அவர்தான். தவறை சரிசெய்ய உதவியமைக்கு நன்றி.

    ReplyDelete
  5. மனிதன் ஒரு அரசியல் விலங்கு - அரிஸ்டாட்டில்

    //அரசு நிர்வாகத்திலுள்ள அரசியல் காரணமாக வேலையை ராஜினாமா செய்துவிட்டார் என்று நினைக்கிறேன்//

    உங்களின் இந்த ஒருவரிக்காக, சக புத்தகவிரும்பி என்ற முறையில் உங்களுக்காக நான் ஒரு புத்தகம் பரிந்துரைக்க விரும்புகிறேன்.

    Why I Am Not A Civil Servant? - Ajay Singh Yadav

    என்னையும் இந்த தொடர் பதிவுக்கு அழைத்த உங்களின் அன்பிற்கு நன்றி.

    - ஞானசேகர்

    ReplyDelete