
தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பல வருடங்களாக பார்ப்பதே இல்லை. நேரமும் பொறுமையும் இல்லை என்றாலும், எல்லாவற்றிலுமே ஒரு நாடகத்தன்மை இருப்பதே அவைகளைத் தவிர்ப்பதர்க்கான முக்கியக் காரணம்.
"தற்போது பாடக் கூடிய 1% இளம் பாடகர்கள் தான் நம்பிக்கை அளிக்கிறார்கள். மீதமுள்ள 99% நபர்கள் மேடையை அலங்காரம் செய்வதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். இந்தப் போக்கு ரொம்பவும் வருத்தம் அளிக்கிறது" என்று SPB தனது நேர்முகத்தில் ஒருமுறை பகிர்ந்துகொண்டார். அவற்றை நிரூபிப்பது போலவே இருக்கிறது இதுபோன்ற நிகழ்ச்சிகள்.
முன்னேறிய நாடுகளில் தஞ்சம் அடைந்த ஈழத் தமிழர்கள் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்கிறார்கள் என்பதால் சமீப காலமாக விஜய் டிவி பார்த்து வருகிறேன். நான் பார்க்கத் துவங்கியபோது கனடா, சிங்கப்பூர், நியுசிலாந்து போன்ற நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் திறமையை நிரூபித்துக் கொண்டிருந்தார்கள்.
பால் வடியும் முகம், குழந்தைத் தனமான உடல் மொழி, பாடும்பொழுது மட்டும் அபரிமிதமான ஆற்றலை வெளிப்படுத்தும் தன்மை - என்று சாய் ஈசன் சற்றே என்னுடைய கவனத்தை ஈர்த்தார். பதின் பருவத்தில் இருப்பதால் என்னுடைய செல்லப் பிள்ளை என்று கூட சொல்லலாம். பள்ளி படிப்பைக் கூட பாதியில் நிறுத்திவிட்டு, தனியார் தொலைகாட்சி நடத்தும் பாடல் போட்டியில் கலந்து கொள்வதற்கு நிறையவே தைரியம் வேண்டும். இசைதான் வாழ்க்கை என்ற முடிவை எடுக்காமல் இது சாத்தியம் ஆகாது. அதற்கு மேல் பெற்றோர் மற்றும் உடன் பிறப்புகளின் தாங்குதல் இல்லாமல் கலைப் பயணம் இனிமையாக அமையாது.

சாய் ஈசன் பற்றிய சுய தகவல்கள் இணையத்தில் கிடைக்கிறதா என்று தேடியபொழுது வக்கீசன் வலையில் சிக்கினார். இவர் சாய் ஈசனின் சகோதரர்களில் ஒருவர். "சரிகா" என்ற இசைக் கல்லூரியின் முதல் பட்டதாரி மாணவர். கனடாவில் எடுக்கப்பட்ட "மதி" என்ற தமிழ் படத்தின் பின்னணி இசையமைப்பாளர். அதைத் தொடர்ந்து "என் கண் முன்னாலே", "பாரதம்" போன்ற தயாரிப்பில் இருக்கும் படங்களுக்கும் இசைப் பங்களிப்பு செய்து கொண்டிருக்கிறார்.
நேரம் எடுத்து படத்தையும், இசைக் கோர்வையையும் கவனிக்க வேண்டும்.
:-)
மதி - கனடா தமிழ் படம்
Part - 1
Part - 2
Part - 3
Part - 4
Part - 5
Part - 6
Part - 7
Part - 8
Part - 9
Part - 10
Part - 11
கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் தங்களுடைய முயற்சிகளில் ஏதோ செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை சற்று உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
Tecmaztars
நேரம் எடுத்து படத்தையும், இசைக் கோர்வையையும் கவனிக்க வேண்டும்.
:-)
மதி - கனடா தமிழ் படம்
Part - 1
Part - 2
Part - 3
Part - 4
Part - 5
Part - 6
Part - 7
Part - 8
Part - 9
Part - 10
Part - 11
கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் தங்களுடைய முயற்சிகளில் ஏதோ செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை சற்று உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
Tecmaztars
கனடாவில் (norway, swiss, Jerman)வாழும் இலங்கைத் தமிழர்கள் தங்களுடைய முயற்சிகளில் ஏதோ செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை சற்று உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
ReplyDeleteyes considering the constraints they have,
நல்ல தகவல் கிருஷ்ணா! சமீபமாய் அவன் பாடிய பாடலகள் அனைத்துமே ஒருமாதிரி Effortless-ஸாக பாடிவிட்டு போகிறான், மதி பார்க்கிறேன்.. :-)
ReplyDelete