
கணவனைப் பிரிந்த பெண் ஒருத்தி, பள்ளி விடுமுறையில் இருக்கும் தன் மகனான ஏழு வயது சிறுவனை (சாங் வூ - 7 வயது) மலை கிராமத்தில் தனிமையில் வசிக்கும் தன் அம்மாவின் (கிம்- யூல்-பூ - 77 வயது) வீட்டிற்கு முதன் முறையாக அழைத்துச் செல்கிறாள். அந்த பயணத்திலிருந்தே படம் துவங்குகிறது. குக்-கிராமத்திற்குச் செல்லும் பேருந்துப் பயணமே அவனுக்கு அலுப்பூட்டுவதாக அமைகிறது. உடன் பயணிக்கும் வெள்ளந்தியான மனிதர்களின் பேச்சும், உடல் மொழியும் அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. பாதியிலேயே திரும்பிவிடலாம் என்று அம்மாவுடன் சண்டை போடுகிறான்.
சிறுவனை அடித்து இழுத்துக்கொண்டு பாட்டியிடம் செல்கிறாள். கணவனைப் பிரிந்து வாழும் அவள், தனக்கொரு வேலை கிடைக்கும் வரை அவனை பார்த்துக்கொள்ளுமாறு பாட்டியிடம் கூறிவிட்டு கடைசிப் பேருந்தைப் பிடிக்கப் புறப்பட்டுவிடுகிறாள்.

அன்பான பணிவிடைகளும், எளிமையான தியாகமும் மூதாட்டியின் மீதான அன்பை சிறுவனுக்கு ஏற்படுத்துகிறது. அழுக்கானவள் என்றும், பைத்தியக்கார ஊமை என்றும் ஆரம்பத்தில் வெறுத்து ஒதுக்கிய பாட்டியை பிரிய மனமில்லாமல் கடைசியில் சிறுவன் தவிக்கிறான். சில வார்த்தைகளை எழுதி தபாலில் அனுப்ப அவளுக்குக் கற்றுத் தருகிறான். முடிவில் பேரனை வழியனுப்பிவிட்டு சோகம் ததும்ப அந்த மலைப்பாதை வழியே தனிமையுடன் கூன் முதுகிட்டு பாட்டி நடந்து செல்கிறாள். திரையில் இருள் கவிய 'எல்லா பாட்டிகளுக்கும் இந்தப் படம் சமர்ப்பணம்' எனும் எழுத்துக்களுடன் படம் முடிகிறது.
பாட்டிகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்குமான உறவு மாதிரியான பலமான விஷயம் வேறெதுவும் இல்லை. நாள் முழுவதும், வருடம் முழுவதும் பெற்றவர்களுடன் இருந்தாலும் விடுமுறையின் சில தினங்களில் பகிரக் கிடைக்கும் தாத்தா பாட்டியின் அன்பு வருடம் முழுவதற்குமான உற்சாக ஆற்றல் தரும் விஷயமாக சிறுவர்களுக்கு இருக்கிறது.
எல்லாருமே வாழ்க்கையில் கடந்து வந்த அனுபவங்கள் தான்... திரையில் பார்க்கும் பொழுது இழந்துவிட்ட எதையோ ஞாபகப்படுத்துவதை உள்ளுணர்வு ஏற்படுகிறது. மொத்தப் படமும் ஆங்கில வரிகளுடன் யூட்யுப்-ல் காணக் கிடைக்கிறது.
Youtube Link:
The Way Home - Part 1
The Way Home - Part 2
The Way Home - Part 3
The Way Home - Part 4
The Way Home - Part 5
The Way Home - Part 6
The Way Home - Part 7
The Way Home - Part 8
The Way Home - Part 9
The Way Home - Part 10
இந்தப் படத்தைப் பற்றிய நண்பர் சுரேஷ் கண்ணனின் விமர்சனம்: பாட்டிமார்களுக்குச் சமர்ப்பணம்
வாங்க கிருஷ்ணா...
ReplyDeleteசினிமா பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களா? :)
செழியனின் 'உலக சினிமா' புத்தகத்திலும் இத்திரைப்படம் இடம்பெற்றிருக்கிறது.
-ப்ரியமுடன்
சேரல்
நல்ல பதிவு...
ReplyDelete@ சேரல்,
ReplyDeleteகடந்த ஞாயிறன்று 17 உலகப் படங்களையும், 3 தமிழ்ப் படங்களையும் வாங்கியிருக்கிறேன்(மந்திரப் புன்னகை, ஒரு கை ஓசை, ஆறிலிருந்து அறுபது வரை). கிட்டத் தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு சில படங்களைப் பார்க்கலாம் என்றிருக்கிறேன். எல்லாம் 20 வருடங்களுக்கு முந்தையப் படங்கள்.
:-)))))
நேரம் எடுத்து நிதானமாகப் பார்க்க வேண்டும்.
@ பெஸ்கி,
பின்னூட்டத்திற்கு நன்றி...
ஹா ஹா வாய்யா வா.... இப்போதான் சினிமா காத்து அடிக்குது உங்க பக்கம்....:-)
ReplyDeleteநல்ல நாவலை படிக்கிற மாதிரி உணர்வுகளை தரக்கூடிய நிறைய படங்கள் இருக்கு கிருஷ்ணா....
என்ன படங்கள் வாங்கியிருக்க, தனிமடலிட முடியுமா?
நல்ல பதிவு. பாட்டியின் அன்பும், பொறுமையும், புரிதலும் சிறுவனுக்குப் புரியத் துவங்கும் காட்சிகள் கவித்துவம் மிகுந்த ஒன்று. கூடுதலாக நீங்கள் கொடுத்துள்ள லின்க் இந்தப் படத்தை மீண்டும் பார்க்கும் இனிய வாய்ப்பைக் கொடுத்தது. நன்றி.
ReplyDeleteநன்றி சைக்கிள்
ReplyDelete